Superbook.CBN.com சூப்பர் பாயிண்ட்ஸ் பரிசுப் போட்டிகள்
உள்நுழையவோ அல்லது வெற்றிபெறவோ பணம்செலுத்த தேவையில்லை. பலர் உள்நுழையலாம், ஒரு சிலரே வெற்றி பெறுவார்கள்.
தகுதி: சூப்பர்புக் (SUPERBOOK.CBN.COM) சூப்பர் பாயிண்ட்ஸ் பரிசுப் போட்டிகள் (“ஸ்வீப்ஸ்டேக்ஸ்”), அமெரிக்காவின் ஐம்பது (50) மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தின் சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி தடைசெய்யப்பட்ட இடங்களில் செல்லுபடியாகாது. கிறிஸ்டியன் பிராட்காஸ்டிங் நெட்வொர்க் (நிர்வாகம்), அதன் தாய் நிறுவனம், கிளை நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் விளம்பர மற்றும் விளம்பர ஊக்குவிப்பு முகமைகளில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர், குழந்தை, துணைவர் அல்லது உடன்பிறந்தோர் மற்றும் அவர்களின் கணவர்/மனைவி ஆகியோர் எங்கு வசித்தாலும்) மற்றும் அவர்களுடன் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் (உறவினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவோ அல்லது வெற்றி பெறவோ தகுதி இல்லை. இந்தப் போட்டியில் பங்கேற்பதன் மூலம், போட்டியாளர்கள் அதிகாரப்பூர்வ விதிகள், இணையதளத்தின் பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை (இவை இரண்டும் குறிப்புக்காக இதில் சேர்க்கப்பட்டுள்ளன) ஆகியவற்றிற்கு கட்டுப்பட ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், இந்தப் போட்டி தொடர்பான விஷயங்களில் நடுவர்கள் மற்றும்/அல்லது விளம்பரதாரர்களின் முடிவுகளே இறுதியானது மற்றும் அனைவரையும் கட்டுப்படுத்தும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பரிசுப் போட்டி, அனைத்து மத்திய, மாநில மற்றும் உள்ளூர் சட்டங்களுக்கு உட்பட்டது
உள் நுழைய: பரிசுப் போட்டிகள் superbook.cbn.com இல் அதிகாலை 12:01 மணிக்குத் தொடங்கி வெளியிடப்படும். போட்டி கிழக்கு நேரப்படி அதிகாலை தொடங்கி, இரவு 11:59 மணிக்கு முடிவடையும் superbook.cbn.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி இறுதித் தேதியின் கிழக்கு நேரப்படி போட்டி நிறைவடையும். www.superbook.cbn.com (“வலைத்தளம்”) க்குச் சென்று, பரிசுப் போட்டிகளில் பங்கேற்க வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும். குறிப்பிட்ட அந்தப் பரிசுப்போட்டியின் நிபந்தனையின்படி, நீங்கள் பரிசுப்போட்டியில் ஒரு (1) பதிவைச் சமர்ப்பிக்க, உங்கள் சூப்பர் பாயிண்ட்ஸை ஈடு செய்யவேண்டும் நீங்கள் தேவையான சூப்பர் புள்ளிகளின் எண்ணிக்கையைப் பெறவில்லை என்றால், நீங்கள் பரிசுப்போட்டிகளில் நுழைய முடியாது. சூப்பர் பாயிண்டுகளுக்கு பண மதிப்பு இல்லை, மேலும் வலைத்தளத்திற்கு வெளியே எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியாது. அனைத்து உள்ளீடுகளும் இரவு 11:59 மணிக்குள் பெறப்பட வேண்டும். தகுதி பெறுவதற்கு, குறிப்பிட்ட அந்தப் போட்டி முடிவடையும் தேதியின் கிழக்கு நேரத்திற்குள் (ET) பங்கேற்க வேண்டும். ஸ்கிரிப்ட் (script), மேக்ரோ (macro) அல்லது இதர தானியங்கி முறைகள் மூலமாகவோ அல்லது பதிவு செய்யும் முறையைச் சீர்குலைக்கும் எந்தவொரு வழியிலோ உருவாக்கப்படும் பதிவுகள் அல்லது சூப்பர் பாயிண்ட்ஸ்கள்செல்லாதவை ஆகும் அனைத்து உள்ளீடுகளும் விளம்பரதாரருக்கு சொந்தமாகிவிடும், மேலும் அவை ஒப்புக்கொள்ளப்படாது அல்லது திருப்பித் தரப்படாது.
குலுக்கல் முறை: போட்டி காலம் முழுவதும் பெறப்பட்ட தகுதியான பதிவுகளிலிருந்து, போட்டி முடிவடைந்த தேதியிலிருந்து சுமார் 5 வேலை நாட்களுக்குள், விளம்பரதாரரால் நடத்தப்படும் ஒரு சீரற்ற குலுக்கல் மூலம் சாத்தியமான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பெறப்பட்ட தகுதியான உள்ளீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சாத்தியமான வெற்றியாளர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களுக்கு தபால், தொலைபேசி மற்றும்/அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் தகுதிச் சான்றிதழ், பொறுப்புத் துறப்பு மற்றும் சட்டம் அனுமதிக்கும் இடங்களில் விளம்பர ஒப்புதல் ஆகிய படிவங்களை, அது அனுப்பப்பட்ட 7 நாட்களுக்குள் பூர்த்தி செய்து திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த ஆவணங்கள் திருப்பி அனுப்பப்படாவிட்டாலோ, பரிசு அல்லது பரிசு குறித்த அறிவிப்பு உரியவரிடம் சேராமல் திரும்பி வந்தாலோ, அல்லது ஒரு சாத்தியமான வெற்றியாளர் இந்த விதிகளுக்கு இணங்கவில்லை என்றாலோ, அந்தப் பரிசு கொடுக்கப்படாது. அத்தகைய சூழலில், விளம்பரதாரரின் விருப்பப்படி மாற்று வெற்றியாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய பங்கேற்பாளர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரிடம் பரிசுகள் வழங்கப்படும், மேலும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெற்றியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் பொறுப்பு. 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய விண்ணப்பதாரர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளப்படுவார்கள், மேலும் அவர்கள் மேற்கூறிய தேவைகளுக்கு இணங்க வேண்டும். பொருட்களைப் பரிசாக வெல்லும் வெற்றியாளர்கள், ஒருமுறை ஒரு பொருளைப் பரிசாக வென்றால், அடுத்த 30 நாட்களுக்குள் மற்றொரு பொருளைப் பரிசாக வெல்ல முடியாது. அந்த 30 நாட்கள் முடிந்த பிறகுதான், அவர்கள் மீண்டும் அடுத்தடுத்த போட்டிகளில் பொருட்களை வெல்ல தகுதியுடையவர் ஆவார்கள் சூப்பர்பாயிண்ட்ஸ் அல்லது மெய்நிகர் பரிசுகளை (உதாரணத்திற்கு கூப்பன்கள் அல்லது டிஜிட்டல் வெகுமதிகள்) வென்றவர்கள், அந்தப் பரிசை வென்ற அதே காலப்பகுதிக்குள் ஒரு பொருளைப் பரிசாக வழங்கும் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெறத் தகுதியுடையவர்கள்.
பரிசுகள்: ஒவ்வொரு போட்டிக்கும் பரிசு மதிப்புகள் மாறுபடும், மேலும் இந்த மதிப்புகள் superbook.cbn.com இல் போட்டிப் பக்கத்தில் பரிசுகுறித்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து பரிசுகளும் வெளியீட்டாளர்/தயாரிப்பாளர் குறிப்பிடுகிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. பரிசுகள் வெளிப்படையான அல்லது மறைமுகமான எந்த உத்தரவாதமோ அல்லது உறுதிமொழியோ இல்லாமல் "உள்ளபடியே" வழங்கப்படுகின்றன. வெற்றியாளர்கள் தாங்கள் வென்ற பரிசை மாற்றவோ, வேறொருவர் பெயருக்கு மாற்றவோ அல்லது அந்தப் பரிசுக்குப் பதிலாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளவோ முடியாது. ஆனால், போட்டி நடத்தும் நிறுவனம் தனது விருப்பப்படி, அந்தப் பரிசிற்கு நிகரான அல்லது கூடுதல் மதிப்புள்ள மற்றொரு பரிசை வழங்க முழு உரிமை கொண்டுள்ளது. பொருந்தக்கூடிய அனைத்து மத்திய, மாநில மற்றும் உள்ளூர் வரிகளுக்கும், பரிசு பெறுதல் மற்றும் பயன்பாட்டுடன் தொடர்புடைய வேறு ஏதேனும் செலவுகள் மற்றும் செலவினங்களுக்கும் வெற்றியாளர்களே பொறுப்பாவார்கள். இங்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்படவில்லை. பரிசுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தீர்மானிக்கும் முழு அதிகாரம் விளம்பரதாரருக்கே உண்டு.
பொதுவான நிபந்தனைகள்: இந்த பரிசுத் தொகை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் விளம்பரதாரரின் முடிவுகள் இறுதியானவை மற்றும் கட்டுப்படுத்தப்படுத்தக்கூடியவை. கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட தரப்பினர், தொலைந்து போன, தாமதமான, முழுமையற்ற, தவறான, திருடப்பட்ட, திசைமாறிய அல்லது சிதைந்த சூப்பர்பாயிண்ட்ஸ், பதிவுகள் அல்லது பிற இணைப்புகள், இணையம் கிடைக்காமை , தொடர்பு கொள்வதில் ஏற்படும் குளறுபடிகள், கணினி, செயற்கைக்கோள், தொலைபேசி அல்லது கேபிள் பரிமாற்றங்களில் ஏற்படும் தோல்விகள், தொழில்நுட்பக் கோளாறுகள், சிதைந்த அல்லது திசைமாறிய தகவல்கள், கணினி வன்பொருள் அல்லது மென்பொருள் செயல்பாட்டுத் தவறுகள் மற்றும் சிக்கல்களுக்கு நிறுவனம் பொறுப்பல்ல அல்லது மனிதத் தவறுகள், இயந்திரக் கோளாறுகள், மின்னணு அல்லது கணினி சார்ந்த சிக்கல்கள், நெட்வொர்க் பிரச்சனைகள், தட்டச்சுப் பிழைகள், அச்சுப் பிழைகள் அல்லது இந்தப் போட்டி தொடர்பான வேறு எந்த வகையான சிக்கல்களுக்கும் நிறுவனம் பொறுப்பல்ல. குறிப்பாக, போட்டியினை நிர்வகித்தல் (Administration), சூப்பர்பாயிண்ட்ஸ் மற்றும் பதிவுகளைச் செயலாக்குதல், பரிசுகளை அறிவித்தல் அல்லது போட்டி சார்ந்த இதர ஆவணங்களில் ஏற்படும் எந்தவொரு தவறுகளுக்கும் அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். தள பயனர்கள், சேதப்படுத்துதல், ஹேக்கிங் செய்தல் அல்லது பரிசுப் போட்டிகளுடன் தொடர்புடைய அல்லது பயன்படுத்தப்பட்ட ஏதேனும் உபகரணங்கள் அல்லது நிரலாக்கத்தால் ஏற்படும் எந்தவொரு தவறான அல்லது துல்லியமற்ற தகவலுக்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்பல்ல. இந்தப் போட்டியில் பங்கேற்பதாலோ, இணையதளத்தைப் பயன்படுத்துவதாலோ அல்லது அதிலிருந்து தகவல்களைப் பதிவிறக்கம் செய்வதாலோ, பங்கேற்பாளர்கள் அல்லது வேறு எவருடைய கணினிக்கும் ஏற்படும் பாதிப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்பல்ல. போட்டியின் விதிகளை மீறுபவர்கள், இணையதளத்தையோ அல்லது போட்டியின் நடைமுறைகளையோ தவறாகப் பயன்படுத்துபவர்கள் அல்லது முறையற்ற வகையில் நடந்துகொள்பவர்கள் இந்தப் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள். மேலும், அவர்களின் அனைத்துப் பதிவுகளும் செல்லாததாக அறிவிக்கப்படும். வைரஸ், கணினி தீம்பொருட்கள், மென்பொருள் பிழைகள், அனுமதியற்ற நபர்களின் தலையீடு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் போட்டியின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் கருதினால் (அவை மட்டுமே காரணங்கள் என்று இல்லாமல் வேறு காரணங்களாலும் இருக்கலாம்), அத்தகைய சூழல்கள் போட்டியின் நிர்வாகம், பாதுகாப்பு, நேர்மை அல்லது முறையான செயல்பாட்டைச் சிதைப்பதாக நிறுவனம் முடிவு செய்தால் எந்தவொரு காரணத்திற்காகவும் இந்தப் போட்டியை நிறுத்தி வைக்கவோ, மாற்றியமைக்கவோ அல்லது ரத்து செய்யவோ போட்டி நடத்தும் நிறுவனத்திற்கு முழு அதிகாரம் உண்டு. ஒருவேளை போட்டி ரத்து செய்யப்பட்டால், அந்தத் தேதிக்கு முன்னதாகப் பெறப்பட்ட சந்தேகத்திற்கு இடமில்லாத மற்றும் தகுதியான அனைத்துப் பதிவுகளிலிருந்து, தனது விருப்பப்படி அல்லது நியாயமானது எனக் கருதப்படும் முறைப்படி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் விளம்பரதாருக்கு உண்டு போட்டியில் பங்கேற்பதன் மூலம், பங்கேற்பாளர்கள் (மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள்), இந்தப் போட்டியை நடத்தும் நிறுவனம் (Sponsor), அதன் தாய் நிறுவனம், துணை நிறுவனங்கள், விளம்பர முகவர்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகள், ஊழியர்கள் (அனைவரும் இணைந்து 'பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள்' எனப்படுவர்) மீது எந்தவொரு இழப்பீடோ அல்லது புகாரோ கோர மாட்டோம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். போட்டியில் பங்கேற்பதால் ஏற்படும் காயங்கள், இழப்புகள் அல்லது சேதங்களுக்கு இந்தத் தரப்பினர் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள், மேலும் பரிசை ஏற்றுக்கொள்வது, வைத்திருப்பது, பயன்படுத்துவது, தவறாகப் பயன்படுத்துவது அல்லது இந்தப் போட்டியில் பங்கேற்பது ஆகியவற்றின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நபர்களுக்கு ஏற்படும் மரணம் உள்ளிட்ட காயங்கள் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ) நிறுவனம் பொறுப்பேற்காது. பரிசைப் பெற்றுக்கொள்வதன் மூலம், ஒவ்வொரு வெற்றியாளரும் (மற்றும் அவரது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்), சட்டத்தால் தடைசெய்யப்பட்ட இடங்களைத் தவிர்த்து, போட்டி நடத்தும் விளம்பரதார நிறுவனம் தனது விளம்பரங்கள் மற்றும் வணிக மேம்பாட்டிற்காக வெற்றியாளரின் பெயர், முகவரி (நகரம் மற்றும் மாநிலம்), புகைப்படம், குரல் மற்றும் உருவத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்கிறார்கள். இதற்கு வெற்றியாளருக்குத் தனியாக எந்த ஊதியமும் வழங்கப்படமாட்டாது. மேலும், உலகெங்கிலும் எந்தக் காலத்திற்கும், தற்போதுள்ள அல்லது இனிமேல் கண்டுபிடிக்கப்படப்போகும் எந்தவொரு ஊடகத்திலும், வெற்றியாளரின் முன் அனுமதி அல்லது அறிவிப்பு இல்லாமலேயே இதைப் பயன்படுத்த நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு. ஒரே மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்திப் பல நபர்கள் போட்டியில் பங்கேற்று, அது தொடர்பாக ஏதேனும் சர்ச்சை அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்த மின்னஞ்சல் முகவரியின் அதிகாரப்பூர்வ உரிமையாளர் யாரோ, அவரே இந்தப் போட்டியில் பங்கேற்றவராகக் கருதப்படுவார். மேலும், அவர் இந்தப் போட்டியின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கணக்கு சந்தாதாரர் என்பவர், இணைய சேவை வழங்கல் நிறுவனம், ஆன்லைன் சேவை நிறுவனம் அல்லது மின்னஞ்சல் முகவரிகளை வழங்கும் பொறுப்புடைய பிற நிறுவனங்களால் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உரியவராக நியமிக்கப்பட்ட ஒரு தனிநபர் ஆவார்.
சர்ச்சைகள்: இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான ஒரு நிபந்தனையாக, பங்கேற்பாளர் (மற்றும் அவரது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்) பின்வருவனவற்றிற்கு ஒப்புக்கொள்கிறார்கள்: இந்தப் போட்டி தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமாகத் தீர்க்க முடியாத எந்தவொரு சர்ச்சையும் அல்லது சட்ட நடவடிக்கையும், கூட்டுப் புகாராக இல்லாமல் தனித்தனியாகவே தீர்க்கப்பட வேண்டும். மேலும், இந்த வழக்குகள் அனைத்தும் விர்ஜினியாவின் விர்ஜினியா பீச் நகரில் உள்ள தகுதியுள்ள நீதிமன்றத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அந்த நீதிமன்றம் விர்ஜினியா மாநிலத்தின் சட்டங்களுக்கு உட்பட்டே தீர்ப்பு வழங்கும் மேலும், இதுபோன்ற எந்தவொரு தகராறிலும், எந்தவொரு சூழ்நிலையிலும் பங்கேற்பாளர் விருதுகளைப் பெற அனுமதிக்கப்படமாட்டார், மேலும் இதன் மூலம் தண்டனைக்குரிய, தற்செயலான அல்லது விளைவான சேதங்கள் அல்லது வழக்கறிஞர் கட்டணங்கள் உட்பட வேறு ஏதேனும் சேதங்களைக் கோருவதற்கான அனைத்து உரிமைகளையும் தள்ளுபடி செய்கிறார், பங்கேற்பாளரின் உண்மையான செலவுகள் (அதாவது, இந்த போட்டிகளில் நுழைவதற்கான செலவுகள்) தவிர, பங்கேற்பாளர் (மற்றும் அவரது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்) இழப்பீடுகளைப் பெருக்க அல்லது அதிகரிக்க அனைத்து உரிமைகளையும் மேலும் தள்ளுபடி செய்கிறார்.
தனியுரிமை: இந்தப் பரிசுப்போட்டிகள் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள், http://superbook.cbn.com/HelpPages/PrivacyPolicy.aspx இல் கிடைக்கும் ஸ்பான்சரின் தனியுரிமைக் கொள்கையின்படி பயன்படுத்தப்படும்.
வெற்றியாளர்கள் பட்டியல்: வெற்றியாளர்களின் முதற்பெயர் மற்றும் அவர்களது பெயரின் கடைசி எழுத்து (இனிஷியல்) ஆகிய விவரங்களை அறிய (வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு இது கிடைக்கும்), உங்கள் முகவரி எழுதப்பட்டு, தபால் தலை ஒட்டப்பட்ட ஒரு உறையை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்: Superbook.CBN.com (போட்டிகளின் பெயரை உள்ளிடவும்) பரிசுப் போட்டிகள், கவனம்: சூப்பர்புக், 977 சென்டர்வில்லே டர்ன்பைக் வர்ஜீனியா பீச், வர்ஜீனியா 23463 என்ற முகவரிக்கு போட்டி முடிந்த 90 நாட்களுக்குள் ரசீது அனுப்ப வேண்டும்.
விளம்பரதாரர்: கிறிஸ்டியன் பிராட்காஸ்டிங் நெட்வொர்க் 977 சென்டர்வில்லே டர்ன்பைக் வர்ஜீனியா பீச், வர்ஜீனியா 23463.
சுருக்கமான விதிகள்:
நுழைய அல்லது வெல்ல எந்த வாங்கலும் தேவையில்லை. பலர் நுழைவார்கள், சிலர் வெல்வார்கள். Superbook.CBN.com நடத்தும் சூப்பர்பாயிண்ட்ஸ் போட்டி, அமெரிக்காவின் 50 மாநிலங்கள் மற்றும் வாஷிங்டன் டி.சி-யில் சட்டப்பூர்வமாக வசிப்பவர்களுக்கு மட்டுமே உரியது. பரிசுப் போட்டிகள் superbook.cbn.com இல் அதிகாலை 12:01 மணிக்குத் தொடங்கி வெளியிடப்படும். போட்டி கிழக்கு நேரப்படி அதிகாலை தொடங்கி, இரவு 11:59 மணிக்கு முடிவடையும் superbook.cbn.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி இறுதித் தேதியின் கிழக்கு நேரப்படி போட்டி நிறைவடையும். தடைசெய்யப்பட்ட இடத்தில் செல்லாது. http://superbook.cbn.com/HelpPages/ContestRules.aspx இல் கிடைக்கும் அதிகாரப்பூர்வ விதிகளுக்கு உட்பட்டது.
விளம்பரதாரர்: கிறிஸ்டியன் பிராட்காஸ்டிங் நெட்வொர்க், 977 சென்டர்வில்லே டர்ன்பைக் வர்ஜீனியா பீச், வர்ஜீனியா 23463.